Header Ads

test

குற்ற விசாரணைப்பிரிவில் முன்னிலையாகின்றார் அசாத் சாலி!

முன்னாள் ஆளுநர் அசாத் சாலியை குற்ற விசாரணைப்பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அவர் இன்று(வெள்ளிக்கிழமை) குற்ற விசாரணைப்பிரிவில் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உண்மையின் பாதுகாவலர் என்ற அமைப்பின் இணைப்பாளர் சட்டத்தரணி பிரேம்நாத் சி தொலவத்த பொலிஸ் தலைமையகத்தில் பதிவு செய்திருந்த முறைப்பாடு குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் முன்னிலையாகவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, நாட்டில் அண்மையில் இடம்பெற்ற பயங்கரவாதத்தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராகி அவர் சாட்சியம் வழங்கிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

No comments