Header Ads

test

போலி முகவர்களிடம் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு கனடா எச்சரிக்கை!

கனடாவில் விசா பெற்றுத்தருவதாக கூறி மோடியில் ஈடுபடும் போலியான முகவர்கள் குறித்து எச்சரிக்கையுடன் செயற்படுமாறு கனேடிய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
கனேடிய அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘கனடா விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கான தொகை வெறும் 100 கனேடிய டொலர்கள் மாத்திரமே.
எனினும் வெளிநாடுகளுக்கு மக்களை அனுப்பும் பல போலி முகவர்கள் பெரும் தொகையை வசூழித்து வருகின்றனர்.
அத்துடன், கனடா அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ இணையதளம் ஊடாக மாத்திரமே விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடா விசா பெற்றுத்தருவதாக கூறி ஏராளமானோர் ஏமாற்றப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் முறைப்பாடுகளைத் தொடர்ந்தே இந்த அறிவித்தல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

No comments