கல்முனை மதகுருமார்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம்
ம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி, மதகுருமார்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த போராட்டத்தை இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணியளவில் அவர்கள் ஆரம்பித்துள்ளனர்
கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கையின் இந்துகுருமார் ஒன்றியத்தலைவர் சிவஸ்ரீ.க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள், கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான அளகக்கோன் விஜயரெட்னம், சந்திரசேகரம் ராஜன் உள்ளிட்டோர் குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்கள் தெரிவித்துள்ளதாவது, “அரசியல்வாதிகளினால் நாம் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகின்றோம்.
மேலும் எங்களுக்காக குரல் கொடுக்கின்ற கட்சிகள் அரசியல்வாதிகளை பிரதமரும் ஜனாதிபதியும் உதாசீனப்படுத்துகின்றனர்.
அந்தவகையில் இப்போராட்டத்தை இனவாதத்தை தூண்டும் போராட்டமாக எவரும் பார்க்க வேண்டாம்.
இதேவேளை அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் வரை இந்த சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை கைவிடப்போவதில்லை” என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Post a Comment