Header Ads

test

ஹைட்ரோ காபன் திட்டத்திற்கு எதிராக போராட்டம்: மேலும் 40 பேர் கைது!

திருவாரூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடியதாக கூறி 40 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மன்னார்குடி, ஆலிவலம், கோட்டூர், திருகளார் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 40 பேரை நேற்று (திங்கட்கிழமை) கைது செய்த பொலிஸார் அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்துள்ளனர்.
போராட்டத்துக்கு அனுமதி வழங்காத நிலையில் போராட்டத்தை நடத்தியமையாலேயே அவர்களை கைது செய்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஹைட்ரோ காபன் திட்டத்தை கைவிட வேண்டுமென வலியுறுத்தி, தமிழ்நாட்டு விவசாயிகள் சங்கத்தினர் திருவாரூரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் தெரிவித்துள்ளதாவது, “விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அளிக்கும் இத்தகைய திட்டங்களுக்கு மாநில அரசு ஒருபோதும்  அனுமதி வழங்க கூடாது. இந்த திட்டத்தை செயற்படுத்தினால் காவிரி- டெல்டா பகுதி பாலைவனமாகும்.
மக்களை பாதுகாக்க வேண்டிய மத்திய- மாநில அரசுகள் மக்களை அழிப்பதற்கான திட்டங்களை தமிழகத்தில் செயற்படுத்துகின்றது” என அவர்கள் குற்றம் சுமத்தினர்.
இவ்வாறு ஹைட்ரோ காபன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், பொதுமக்கள் உட்பட490 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த செயற்பாட்டுக்கு சமூக அமைப்புகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments