Header Ads

test

தியாகி பொன்.சிவகுமாரனின் 45 ஆண்டு நினைவு நிகழ்வு!

தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் முன்னோடியான, தியாகி பொன்.சிவகுமாரனின் 45வது நினைவு நிகழ்வு, உரும்பிராய் பொதுசந்தையில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று காலை 10 மணியளவில், நடைபெற்றது. அதனை தொடர்ந்து உரும்பிராய் வேம்படி மயானத்தில் உள்ள நினைவுத் தூபியிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஒரு நிமிட அகவணக்கத்தைத் தொடர்ந்து ஈகைச் சுடரை தியாகி பொன்.சிவகுமாரனின் சகோதரி ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து மலர்மாலை அணிவிக்கப்பட்டு நினைவுநாள் அனுட்டிக்கப்பட்டது. 


இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், விந்தன் கனகரட்ணம், கஜதீபன், தவராசா மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments