சூடானில் நிறைவிற்கு வருகின்றது இராணுவ ஆட்சி!
சூடானில் தேர்தல் நடாத்தப்பட்டு புதிய அரசாங்கம் அமைக்கப்படும் என இராணுவம் அறிவித்துள்ளது.
சூடான் ஜனாதிபதிக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்த நிலையில், இராணுவப் புரட்சி காரணமாக ஆட்சி கவிழ்க்கப்பட்டது. ஜனாதிபதி பதவி நீக்கம் செய்யப்பட்டு இடைக்கால இராணுவ ஆட்சி நடைபெற்று வருகின்றது.
புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற இராணுவத் தளபதியும், மக்களின் எதிர்ப்பு காரணமாக பதவியை இராஜினாமா செய்தார்.
இதனைத் தொடர்ந்து சிவில் ஆட்சியை ஏற்படுத்த வலியுறுத்தி பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இராணுவ தலைமையகம் மற்றும் பல்வேறு பகுதிகளில் போராட்டக்காரர்கள் மீது இராணுவம் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் 35 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன், 100 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்தநிலையில், இராணுவ ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தையை நிறுத்த முடிவு செய்துள்ளனர்.
எதிர்க்கட்சிகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை முறித்துக்கொள்வதாகவும், இன்னும் 9 மாதங்களில் பொதுத்தேர்தல் நடத்தப்படும் எனவும் இராணுவத்தளபதி அறிவித்துள்ளார்.
Post a Comment