தாய்லாந்து பிரதமரை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு!
அதன்படி தாய்லாந்து நாடாளுமன்ற மக்களவையின் 500 உறுப்பினர்களும் செனட் சபையின் 250 உறுப்பினர்களும் இன்று (புதன்கிழமை) வாக்களிக்கவுள்ளனர்.
மார்ச் மாதம் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெறாததையடுத்து இன்றைய நாடாளுமன்ற வாக்களிப்பு இடம்பெறுகிறது.
பிரதமர் பிராயுத் சான் ஓ ச்சா ( (Prayut Chan-o-Cha) மீண்டும் அந்தப் பதவிக்குத் தெரிவு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இராணுவ ஆதரவு பெற்ற அவரது பலாங் பிரசாரத் (Palang Pracharat) கட்சி, அரசாங்கம் அமைக்கத் தேவைப்படும் 376 இடங்களைப் பெறுவதற்கு கூட்டணி வாய்ப்புகளை நாடியுள்ளது.
மறுபுறம் இராணுவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கூட்டணியைச் சேர்ந்த Thanathorn Juangroongruangkit உம் பிரதமர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.
அவரது Future Forward கட்சி பொதுத் தேர்தலில் 3ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. ஆனாலும் அவர் மீது 2 குற்றவியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. எனினும் அரசியல் நோக்குடன் தம்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment