நாவற்குழியில் புத்தர்:கனடாவிலோ விமானத்திலிருந்து பூமாரி?
தாய் மண் விகாரைகளால் சூறையாடப்பட்டு செல்லரித்துக்கொண்டிருந்தாலும்
தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் ஆலய உற்சவங்களில் நம்மவர்கள்
செய்யும் அலப்பறைகளிற்கு குறைவேயில்லை.
ஒருபுறம் இருக்கின்ற தாயகத்தில் நல்ல நிலையிலுள்ள கோயில்களை புலம்பெயர் தேச
நிதியில் இடித்து மீள கட்டிக்கொண்டிருக்க இன்னொரு புறம் புலம்பெயர்
தேசங்களில் இன்னொரு வகையில் கோமாளிக்கூத்துக்கள் அரங்கேறி வருகின்றன.
இலங்கை விமானப்படையினை இனஅழிப்பு விமானப்படையென தமிழ் மக்கள் விமர்சிக்க
அதன் பாவத்தை கழுவ நல்லூரில் தேர் திருவிழாவிற்கு ஹெலியில் இருந்து
பூவீசும் கூத்தை அரசு ஆரம்பித்திருந்தது.ஆனாலும் ஆலய நிர்வாகம் அதனை
மறுதலித்து தடுத்து நிறுத்திவிட்டது.
ஆனாலும் தற்போது கனடா ஒட்டாவா சிவன் கோயிலில் விமான மூலம் பூத்தூவி கொண்டாடி இருக்கின்றனர் புலம்பெயர் உறவுகள்.
கன்னியா தொடங்கி முல்லைதீவு நீராவியடி மற்றும் கொக்கிளாய் என நீண்டு
நாவற்குழியில் தற்போது புத்தர் இராணுவத்துடன் வந்து நிற்கின்றார்.
ஆனாலும் அதனை பற்றி அலட்டிக்கொள்ளாத நம் உறவுகள் தேருக்கு பூப்போட்டு கொண்டாடிவருகின்றனர்.
Post a Comment