Header Ads

test

ஜேம்ஸ் பத்திநாதர் மறைவு: இனத்திற்கு போரிழப்பாகும்

அப்பாவிப் பொது மக்களை நோக்கி இராணுவத்தாக்குதல்கள் நடைபெற்ற காலத்தில் மக்களோடு மக்களாக மனிதநேயப்பணியாற்றிய அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அவர்களின் மறைவு எமது இனத்திற்கு போரிழப்பாகும். இவ்வாறு வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். 


கிழக்கு பிரதேச மக்கள் சார்பாக எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். யுத்த காலத்திலும் அதற்குப் பின்னரான வேளைகளிலும் அருட்தந்தையர்கள் பலர் ஆற்றிய ஆற்றிவரும் சேவைகளை நாம் எப்போதும் நினைவில் கொள்கின்றோம். எமது மக்கள் மீது கோர யுத்தம் முடுக்கிவிடப்பட்டு மனிதாபிமானப் பேரவலத்தினுள் எமது மக்கள் தள்ளப்பட்டிருந்த சமயத்தில் மக்களோடு மக்களாக அநீதியை உலக அரங்கிற்கு கொண்டு செல்லவும் மக்களின் துயரினை துடைப்பதிலும் ஜேம்ஸ் பத்திநாதர் அடிகளார் போன்றோர் ஆற்றிய நடுநிலைமைப்பணிகள் என்றும் மறக்கமுடியாதவை. 
தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான மனித உரிமை மீறல்கள் மறைக்கப்பட எத்தனிக்கப்படும் தருணங்களில் அதன் நேரடி சாட்சியாளர்களாக நடுநிலையான உண்மைத்தெரிவிப்பாளர்களாக ஜேம்ஸ் பத்திநாதர் அடிகளார் போன்றோரின் பங்களிப்புக்கள் எதிர்காலத்திலும் இருந்திருக்கவேண்டும். 
ஆனால் துரதிஸ்டவசமாக அவர் இவ் உலகை விடைபெற்றுள்ளார். பிறப்பு நிச்சயம் இல்லாவிட்டாலும் இறப்பு நிச்சயானது என்பார்கள். இவ் வரையரைக்குள் அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் உடைய பிரிவை சகித்துக்கொள்ள முடியாது. போரின் இறுதித் தருணங்கள்இ அவலங்கள் தொடர்பில் அவருக்கு இன்றும் எம் இனம் சார்ந்து இருந்து வருகின்ற பாரிய பொறுப்பினை அவரது பிரிவு தடுத்துவிட்டதா என்ற ஏக்கம் உணர்வுள்ள தமிழர்களாக எம்மிடத்தில் நிழலாடுகின்றது.


போரின் இடர்கள் ஆழிப்பேரலையின் பின்னரான அவலங்கள்இ இறுதி யுத்தத்தின் அவலங்களில் அவராற்றிய மனிதாபிமானப்பணி அவரை என்றும் நினைவுகூர்வதற்கான தேவையினை வலியுறுத்தி நிற்கின்றது. அநாதரவான சிறார்கள்இ பெண்கள்இ வயோதிபர்கள்இ குரலற்றோருக்கு நிரந்தர சுபீட்சம் கிடைக்க பல்வேறு திட்டங்களை வன்னிப்பெருநிலப்பரப்பில் நடைமுறைப்படுத்தியிருந்தார் என்பது கண்கூடு.

பொதுவில் போரின் பின்னரான சூழ்நிலையில் மனிதாபிமானப்பணியாற்றியோர் மகோன்னதமாகப் பேணப்பட்டுள்ளனர். துரதிஸ்டவசமாக போருக்குப் பின்னரும் தமிழ் மக்களுக்கான நீதி முன்வைக்கப்படாமையினால் போரில் மனிதாபிமானப்பணியாற்றியோர் ஏதோ ஒருவகையில் குரலற்றவர்களாக மாற்றப்படவேண்டும் என்ற நிகழ்ச்சிநிரல் நாட்டில் இருந்தே வருகின்றது. அப்படியான ஓர் சூழ்நிலையில் அருட்தந்தையின் மறைவு நிரந்தரமாகவே அவரின் குரலை அல்லது பணியை நிறுத்தி விட்டது தமிழ் மக்களின் துரதிஸ்டங்களில் ஒன்று என்றே பார்க்கப்படவேண்டும். மதங்களுக்கப்பால் நாம் எமது இனமாக செயற்பட்டு மக்களின் அவலங்களைத் தீர்க்கவேண்டும் என்ற உயரிய எண்ணத்துடன் சேவையாற்றிய ஜேம்ஸ் பத்திநாதர் அடிகளாரின் துயரத்தில் வலி கிழக்கு மக்கள் சார்பாக நாம் அஞ்சலிக்கின்றோம். 

No comments