Header Ads

test

தர்ணா போராட்டத்தில் குதித்தார் பிரியங்கா காந்தி!

உத்தரபிரதேசத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சென்று ஆறுதல் கூற காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் பிரியங்கா காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக அவர் இன்று (வெள்ளிக்கிழமை) கட்சி தொண்டர்களுடன் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளார்.
உத்தரபிரதேசம் மாநிலத்தின் சோன்பத்ரா எனும் இடத்தில் சமீபத்தில் இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்பட்டது.
குறித்த மோதலில் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  இவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூற காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி நேரில் சென்றுள்ளார்.
இதன்போது நாராயண்பூர் எனும் பகுதியில், பொலிஸார் பிரியங்கா காந்தியின் காரை நிறுத்தி இந்த பகுதிக்கு வர அனுமதியில்லை என கூறியுள்ளனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுடன், பிரியங்கா காந்தி தர்ணாவில் ஈடுப்பட்டுள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர், “கலவரத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூற வேண்டும். இதுவே எனது தேவை.
என் மகனின் வயதிருக்கும் ஒரு வாலிபர் சுடப்பட்டு தற்போது  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்களை காண வரும்போது பொலிசார் உள்ளே வர அனுமதி இல்லை என வழியில் மறுக்கின்றனர்.
சட்ட ரீதியாக அனுமதி மறுக்கப்பட ஏதேனும் உத்தரவு  உள்ளதா? அவ்வாறு இருந்தால் அதை காண்பியுங்கள். நான் இங்கேயே அமைதியாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

No comments