அரசியல் கைதிகளா?அனந்திக்கு தெரியாதாம்!
வடமாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் முற்றாக யாழிலுள்ள இந்திய
துணைதூதரக பிரதிநிதியாக மாறியுள்ளார்.வாரக்கணக்கில் உண்ணாவிரத போராட்டங்களை
நடத்திய அரசியல் கைதிகளை எட்டிக்கூட பார்த்திராக அனந்தி இந்திய மீனவர்களை
பார்வையிடுவதற்காக வவுனியா சிறைச்சாலைக்கு பாய்ந்து சென்றுள்ளார்.
வவுனியா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் ஏழு பேரை
சந்தித்து அவர்களின் விடுதலையை துரிதப்படுத்தவதற்காகவும், ஆறுதல்
தெரிவிப்பதற்காகவும்; வவுனியா சிறைச்சாலைக்கு தான் சென்றிருந்ததாகவும் அவர்
விளக்கமளி;த்துள்ளார்.
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த இந்திய மீனவர்கள் ஏழுபேரை இலங்கை
கடற்படையினர் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தியுள்ளனர். இதையடுத்து
வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏழு மீனவர்களையும் நேரில்
சென்று சந்தித்து அவர்களின் விடுதலையை துரிதப்படுத்த நடவடிக்கை
மேற்கொள்வதற்காக இன்று வவுனியா சிறைச்சாலைக்குச் சென்றுள்ளதாகவும்
தெரிவித்தார்.
சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் தமது குடுபத்தினருக்கு
இத்தகவல்களை வழங்குவதற்காக யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய தணைத்தூதுவர்
பாலச்சந்திரனுடனும் கதைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இவர்களின்
விடுதலை தொடர்பான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள பார்வையிட்டு நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் மிக விரைவில் நாடு
திரும்பவுள்ளதாக நம்புவதாகவும் அவர்களுக்கு ஆறுதல்களையும் தெரிவித்து
வந்துள்ளதாக அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
Post a Comment