வல்லைக்கும் வருகின்றது டிமான்ட்?
பல பில்லியன் நிதியை விழுங்கி நிலத்தடி நீர்விநியோக குழாய்கள்
புதைக்கப்பட்டு விட்ட போதும் எங்கிருந்து நீரை எடுப்பதென்பது
முடிவாகவில்லை.இரணைமடுக்குளத்திலிருந்து நீரை கொண்டுவர சிறீதரன்
முட்டுக்கட்டை போட வடமராட்சி கிழக்கிலிருந்து கடல்நீரை நன்னீராக்கி
கொண்டுவரும் திட்டத்திற்கு சுமந்திரன் குழப்பம் விளைவித்துவருகின்றார்.
இந்நிலையில் தற்போதைய அடுத்த தெரிவான வடமராட்சி களப்பினை வைத்து புதிதாக அரசியல் தரப்புக்கள் கடை விரித்துள்ளன.
குறித்த செயற்திட்ட அலுவலகத்திற்கு அமைச்சர் மனோ கணேசன் மற்றும் ஆளுநர்
மற்றும் அனைத்திலும் தொற்றிக்கொள்ளும் சீ.வீ.கே.சிவஞானம் என இன்று அனைத்து
தரப்பும் களமிறங்கியுள்ளன.
யாழ் மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் முகமாக
முன்மொழியப்பட்டுள்ள வடமராட்சி களப்பு செயற்திட்ட அலுவலகத்திற்கு அமைச்சர்
மனோ கணேசனும்;,ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனும் இன்று (14) முற்பகல் விஜயம்
மேற்கொண்டதுடன் செயற்திட்டம் குறித்தும் செயற்திட்டத்தின் தற்போதைய நிலைமை
குறித்தும் ஆராய்ந்ததாக ஆளுநர் அலுவலகம் அறிவித்துள்ளது.
பொறியியலாளர் குகனேஸ்வரராஜாவினால்; முன்மொழியப்பட்டு பொறியியலாளர்
ஏ.டி.எஸ்.குணவர்த்தன அவர்களினால் தயாரிக்கப்பட்டு அமைச்சரவை அனுமதியும்
பெறப்பட்டு இதுவரையும் ஆரம்பிக்கப்படாமல் இருக்கும் 'வடமராட்சி களப்பு'
நன்னீர் திட்டத்தினை ஆரம்பிப்பதற்கு நிதியுதவி வழங்கவேண்டுமென்று ஆளுநர்
கலாநிதி சுரேன் ராகவன் ,அமைச்சர் கௌரவ மனோ கணேசன் அவர்களைய
கேட்டுக்கொண்டதற்கிணங்க அமைச்சர் அவர்கள் தனது தேசிய ஒருமைப்பாடு, அரசகரும
மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்துசமய விவகார அமைச்சினூடாக இந்த
திட்டத்தினை ஆரம்பிப்பதற்கான நிதியுதவியினை வழங்குவதற்கு
முன்வந்திருக்கின்றார்.
இந்த செயற்திட்டம் தொடர்பாக அமைச்சருக்கு விளங்கப்படுத்துவதற்கும்
செயற்திட்ட பகுதியினை நேரடியாக கண்காணிக்கும் நோக்கில் அமைச்சர் தொண்டமனாறு
பகுதியில் அமைந்துள்ள செயற்திட்ட அலுவலகத்திற்கு வருகைதந்திருந்தார்.
இந்த திட்டத்தினை ஆரம்பிப்பதற்கு தனது அமைச்சினூடாக நிதியினை வழங்குவதுடன்
தனது அமைச்சினூடாக இந்த திட்டத்திற்கான முழு நிதியினையும்
பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வதற்கான நடவடிகைகளை
மேற்கொள்வதாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், வடமாகாண
சபையின் அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்
எம்.கே.சிவாஜிலிங்கம், ஆளுநரின் செயலாளர், யாழ் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட
அரச உயரதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
Post a Comment