துப்பாக்கியை காண்பித்து அச்சுறுத்திய மேயருக்கு கடூழியச் சிறை
அம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் பிரேமசிறி பரணமான்ன ஆகியோருக்கு 5 வருடக் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் இன்று (02) தீர்ப்பளித்துள்ளது.
2014ம் ஆண்டு அம்பாந்தோட்டைக்கு சென்ற ஐக்கிய தேசியக் கட்சியி பாராளுமன்ற உறுப்பினர்களை நோக்கி கைத் துப்பாக்கியை காண்பித்து அச்சுறுத்தல் விடுத்த குற்றத்திற்காகவே இவ்வாறு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தின் பின்னர் அது விளையாட்டுத் துப்பாக்கி என்று மேயர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 29ம் திகதி கைது செய்யப்பட்டு, பின் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
Post a Comment