கித்சிறியின் இடமாற்றம் திடீர் இரத்து - காரணம் என்ன?
குருநாகல் மாவட்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் கித்சிறி ஜயலத்துக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை இரத்து செய்வதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் நேற்று நடைபெற்ற விசேட ஒன்றுகூடலின் போது, பிரதிப் பொலிஸ் மாஅதிபருக்கு திருகோணமலை பிரதேசத்திற்கு இடமாற்றம் செய்வதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.
எவ்வாறாயினும், இன்று காலை மீண்டும் இந்த விவகாரம் குறித்து விவாதித்த பின்னர், இடமாற்றத்தை இரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு செயலாளர் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
Post a Comment