Header Ads

test

மடு திருவிழா - பாதுகாப்பு தொடர்பில் ஆராய்வது


நடைபெறவுள்ள மடு தேவாலயத்தின் திருவிழாவை முன்னிட்டு வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன தலைமையில் பாதுகாப்பு தொடர்பான ஒன்றுகூடல் ஒன்று நேற்று (01) இடம்பெற்றது.

இந்த திருவிழாவிற்கு நாடாளவியல் ரீதியாக பெரும்பாலான கிறிஸ்த்தவ மக்கள் வருகை தர இருப்பதால் இவர்களது பாதுகாப்பு நிமித்தம் இந்த பாதுகாப்பு ஒன்றுகூடல் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இதில் 61வது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்.கே.பீ.எஸ். கெடகும்புர, 613 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் ஆர்.கே.என்.சீ.ஜயவர்தன, பொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் மடுதேவாலயத்தின் அருட்தந்தை பெப்பி சூசையும் இந்த பாதுகாப்பு ஒன்றுகூடலில் இணைந்து கொண்டனர்.

No comments