கிளிநொச்சி இரட்டை கொலை சந்தேக நபருக்கு விளக்கமறியல்
கிளிநொச்சி இரட்டை கொலை சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிளிநொச்சி ஜெயந்திநகர் பகுதியில் தாயும் மகனும் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் கொலையின் சூத்திரதாரி என்ற சந்தேகத்தின் பெயரில் அயல் வீட்டுக்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த சந்தேக நபரை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் பொலிஸார் இன்று (01) முன்னிலைப்படுத்தினர்.
இதன்போது குறித்த சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Post a Comment