வறட்சியில் வெதும்பும் பொன்னகர் மக்கள்
ஒவ்வொரு வருடமும் வறட்சியால் பாதிக்கப்பட்டு வருகின்ற பொன்னகர் கிராமத்திற்கு நிரந்தர நீர் வசதியை ஏற்படுத்தி தருமாறு கிளிநொச்சி - பொன்னகர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பொன்னகர் கிராமத்தில் 586 குடும்பங்களைச் சேர்ந்த 2100 பேர் வாழ்கின்றனர்.
கிராமத்தின் பெரும்பாலன பகுதிகள் வருடத்தின் வறட்சியான காலத்தில் குடிநீர் உள்ளிட்ட நீர்த் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியாது மக்கள் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
Post a Comment