Header Ads

test

யேர்மனியில் தமிழாலயத்தின் ஆசிரியை கொரொனாவால் சாவு!

யேர்மனி ஆகன் நகரத்தில் அமைந்துள்ள தமிழாலயத்தின் உதவி நிர்வாகியும் தமிழ் ஆசிரியருமாக கடையாற்றி வந்த திருமதி. விஐயலட்சுமி குணபாலசிங்கம் அவர்கள் இன்று 24.4.2020 வெள்ளிக்கிழமை
கொரோனா வைரஸ் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு சாவடைந்துள்ளார்.

இருவாரங்களாக கொடிய கொரோனா தொற்றுக்கிலக்காகிய நிலையில்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிற்சைகளைப் பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று சாவடைந்துள்ளார் என்பதை அறியத் தருகிறோம்.

இவருடைய இழப்பினால் தவிக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

No comments