நான் மகிந்த அல்ல: மோசடிக்கு உடன்படேன்
தேர்தல் செலவுகளிற்கென எமது மக்களிடம் உதவி வேண்டுவது தவறல்ல.ஏனெனில் அவ்வாறு வாங்கி நாடாளுமன்றம் சென்றால் மக்கள் எம்மிடம் கேள்வி கேட்பதற்கான உரித்தை கொண்டவர்களாகிவிடுவர்.
ஆனாலும் பிரதமர் மகிந்தவோ வழமை போலவே தேர்தல் செலவிற்கு பணம் பெறுவது அரச நிதியிலிருந்தென இப்போதும் நம்புகின்றார் போல தெரிகின்றது.
எனது அரசியல் வாழ்வில் அவ்வாறு அரச நிதியை சுரண்டுவது நடக்காது என ஆணித்தரமாக தெரிவித்துள்ளார் சி.வி.விக்கினேஸ்வரன்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று செவ்வாய் கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட சி.வி.விக்கினேஸ்வரன் நேற்றைய தினம் இலங்கை பிரதமர் ஊடக நிறுவன ஆசிரியர்களை சந்தித்த போது விக்கினேஸ்வரன் தேர்தல் செலவிற்கு காசில்லாமல் அலைவதாக தெரிவித்துள்ளார்.அத்துடன் வடமாகாணத்திற்கு தான் வழங்கிய நிதியை திருப்பி அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
முதலாவதாக வடமாகாணத்திற்கென ஒதுக்கப்பட்ட ஒரு சதமும் திருப்பி அனுப்பப்படவில்லையென்பதை சான்றுகளுடன் நிரூபித்துள்ளேன்.
திருப்பி அனுப்பப்பட்டதென அவர் சொல்வதெல்லாம் அவரது அமைச்சர்களால் ஒதுக்கப்பட்டு மாவட்ட செயலகங்களால் செலவிடப்படாது திருப்பி அனுப்பி வைக்கப்பட்டவையே.
இரண்டாவதாக அவ்வாறு மாகாணசபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை கூட் செலவழிக்காது விட்டாலும்; அதனை கட்சி தேர்தல் செலவிற்கு பயன்படுத்த முடியாது.அது அரச நிதி.
ஆனாலும் பிரதமர் மகிந்த தனது கடந்த கால அரசியல் அனுபவ பிரகாரம் அரச நிதியை தேர்தலுக்கு பயன்படுத்திய அனுபவ பிரகாரம் என்னை அவ்வாறு செய்யதெரியாதவரென கூறுகின்றாரோ தெரியவில்லையென சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
Post a Comment